Archive for கவிதை

நினைவுகள்

நினைத்து பார்க்கின்றேன், என் பால்ய பருவத்தை!
முதன் முதலில் தாத்தா என்னை பள்ளியில் சேர்த்த நாளை
அவருக்கு முன்னால் வீட்டுக்கு வந்து அவரை ஆச்சரிய படுத்திய நாட்களை
தெருவில் – குண்டு , பம்பரம்,  கிரிக்கெட் விளையாடிய நாட்கள்

பள்ளிக்கு செல்லாமல், பொய் காய்ச்சல் வந்து படுத்த நாட்கள்
வீட்டு பாடம் செய்யாமல் வகுப்பின் வெளியில் முட்டி போட்ட நாட்கள்
அக்காவுடன் குடுமி பிடி சண்டை போட்ட நாட்கள்
நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்று வீட்டில் அடி வாங்கிய நாட்கள்
ரயில் தண்டவாளத்தில் நண்பனுடன் கை கோர்த்து நடந்த நாட்கள்
சைக்கிள் ஓட்டப் பழகிய நாட்கள் ,
முட்டி பேந்து வீட்டில், அம்மா மருந்து போட்டு தூங்க வைத்த நாட்கள்
குரங்கை போல் புளிய மரத்தில் விளையாடிய நாட்கள்
கோவில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட நாட்கள்
கும்மி அடிக்கும் பெண்களை கேலி செய்த நாட்கள்
வாத்தியாருக்கு பட்ட பெயர் வைத்து மகிழ்ந்த நாட்கள்
வகுப்பறையை மட்டமடித்து மைதானத்தில்
கொட்டமடித்த நாட்கள்
நண்பர்களுடன் கும்பலாக சினிமாவுக்கு போன நாட்கள்
திறையரங்கில் விசிலடித்து எழுந்து
ஆட்டம் போட்ட நாட்கள்
திண்ணையில் உட்கார்ந்து கேலி பேசிய நாட்கள்
வீட்டிற்குள் கிரிக்கெட் விளையாடி பல்புகளை
உடைத்து அப்பாவியாய் நடித்த நாட்கள்

நினைக்கும் போதே எவ்வளவு ஆனந்தம்!
கடவுள் வரம் தருவாரானால்-
எனக்கு ஒரே வரம் தான் வேண்டும்
காலச் சக்கரம் பின்னோக்கி நகர வேண்டும்
மீண்டும் பள்ளி செல்ல வேண்டும்!

Cricket

Comments (2)