அரசியல் காமெடிகள்

அரசியல் என்றாலே காமெடி தான்! அதுவும் தேர்தல் வந்துவிட்டால் மெகா காமெடி தான்! இதோ இங்கே சில கற்பனை மற்றும் எப்போதோ படித்த காமெடிகள்.

சிவகாசி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ‘வெண்கல குரலோன்’ வைகோ அவர்கள், ” அமெரிக்காவிலே, நான் சென்று வந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலே(!!) நடைபெற்ற ஆஸ்கார் விருது நிகழ்ச்சியில், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை உரைக்க செய்து, ஜெய் ஹோ என்று பாடி பாராட்டு பெற்று , ஒன்றுக்கு இரண்டு விருது பெற்ற தங்க தமிழன் ரஹ்மானை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர் பாடிய அந்த பாடலை களவாணி காங்கிரஸ் கட்சி அபகரித்து தேர்தலுக்கு பயன்படுத்துகிறது ( தோளை உலுக்கிக் கொண்டு ), அது ‘ஜெய் ஹோ ‘ அல்ல ‘ ஜெய கோ ‘ . தமிழகத்தின் இதய தெய்வம் அன்னை அவர்களின் முதல் எழுத்தையும் எனது பெயரின் கடைசி எழுத்தையும் சேர்த்து தான் தம்பி ரஹ்மான் இசை அமைத்தார். ஆகவே அந்த பாடலை எங்கள் வெற்றிக் கூட்டணிக்கே உரியது” என்று “ஜெய கோ ” என்று ரஹ்மான் போல் உடலை வளைத்து அவர் பாட ஆரம்பிக்க , கூட்டம் தலை தெறிக்க பறக்கிறது!

சுப்ரமணிய சுவாமியிடம் நிருபர்கள் ‘இந்த தேர்தல்ல எந்த கட்சி ஆட்சிய பிடிக்கும்னு நினைக்கிறிங்க?’ , ‘எவாளும் பிடிக்க மாட்டா!! (அதையே ஆங்கிலத்தில்) nobody is going to win !! கடைசியா எலக்சன் முஞ்சு என்ட வந்து நிப்பா! ‘
நிருபர்கள் திகைப்புடன் ,’ நீங்க தான் தேர்தல்ல போட்டியிடலையே ?’ ,
‘ அதுனால என்ன இப்போ, என்கு இப்வே 225 எம்.பிஸ் சபோர்ட் இருக்கு , அதோட சீனா ஆதரவுல கம்யூனிஸ்ட் சப்போர்ட் வாங்கி ஆட்சிய புச்சுடுவேன், அடுத்த PM நான் தான்!! ‘ – நிருபர்கள் அனைவரும் எஸ்கேப்!

படித்தவை :

1. விஜய்காந்த் ஒரு கூட்டத்தில், குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொன்னபோது ‘பிரேமா’என்று தன் மனைவியின் பெயரை வைத்துள்ளார். ‘தலைவா, அது ஆண் குழந்தை என்று குழந்தையின் அப்பா கூவிச் சொன்னவுடன், ’சரி, சரி அப்படியானால் ‘பிரேமானந்தா’ என்று பெயர் சூட்டுகிறேன்”என்று கூறியுள்ளார்.

பிள்ளையின் பெற்றோர்கள் திகைத்துப் போய்விட்டனர். ‘இப்படி ஒரு பெயரா, வேண்டாம் வேறு பெயர் சூட்டுங்கள”; என்று கேட்க, ‘பிறகெதற்கு என்னிடம் வந்தீர்கள்? நீங்களே பெயர் வைத்துக் கொள்வதுதானே’என்று கோபமாகப் பேசியுள்ளார்.

2. காலத்தின் கோலம்?

”சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது அழகிரியின் பிறந்த நாள் போஸ்டர்களைக் கண்டு மிரண்டுதான் போனேன். ஜனவரி 30- அன்றுதான் அழகிரி பிறந்திருக்கிறார்; காந்தி இறந்திருக்கிறார்!”

6 பின்னூட்டங்கள் »

 1. RJP said

  மதுரைல நீங்க சொன்ன அழகிரி மேட்டேர மட்டும் ஒரு போஸ்டரா அடிச்சு ஒட்டீங்கனு வைங்க, அடுத்த நாளே நீங்க தமிழ் நாடு முழுக்க பாப்புலர் ஆயிருவீங்க.. ஆனா உங்க பாடி தான் பாப்புலர் அப்பளம் மாதிரி பொரிஞ்சு போயிரும்.. ஹா ஹா.. சும்மா ஒரு சோக்கு…

  எல்லா மேட்டரும் நல்ல காமெடி..

  • Vivek said

   அதுக்கெல்லாம் பயந்தா நாம அரசியல் செஞ்சுக்க முடியுமா? 2016’ல எப்படி ஆட்சிய பிடிக்கிறது? 🙂

 2. udhaya said

  vivek vesa comedy nammalu vijayakanthuthan , orupadathula gavundamanita per vaika solluvanuga , thalaivaru , murugesannu vaipaaru , kootame sirikum , ayya athu pombala pullayanbainga , gavundaru , appo murugesi nu pooite irupaaru , enaku moochu vaanguthu nxt meet pandraen…

 3. udhaya said

  mmm ippo site nalla iruku

 4. Jawahar said

  interesting!

  http://kgjawarlal.wordpress.com

 5. nisan said

  suuuuuuuuuuuper

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: