Archive for ஏப்ரல், 2008

டயலாக்

விகடன்’ல ‘டயலாக்’ அப்படின்னு பல ஊரு பேரப் போட்டு அங்க மக்கள் காமெடி’யா பேசிக்கிற மாதிரி போட்டிருப்பாங்க .  அதே ஸ்டைல்’ல, நான் நிஜத்துல கேட்டு ரசித்து சிரித்த டயலாக்குகள்.

1. மைதானத்தில் ஒருநாள் :

ரமேஷ் opening batsman’a இறங்க pad கட்டி ஆயத்தமாகி கொண்டிருக்கிறான். அப்போது ஒரு சுள்ளான். (நம்ம ஊரு சுள்ளானுங்க எப்படின்னா , காதல் படத்துல வர்ற ‘கட்டராண்டி’ மாதிரி தான். உயரமா இருக்க சுவரா பாத்து நீர் கோலம் போடுவானே அப்படிப்பட்ட பசங்க. கீழ படிக்கும் போது இப்படி ஒரு character’a நெனச்சுட்டு படிச்சிங்கனா கொஞ்சம் சுவாரசியமா இருக்கும் )

சுள்ளான்: ரமேஷு என்ன opening’a எறங்குற? கிழிஞ்சிச்சு போ
ரமேஷ் : எலேய் ஏன் போறதுக்கு முன்னாடியே? போடா, போய் வாய பினாயில் ஊத்தி கழுவு.. இன்னைக்கு பாருடா அண்ணன் எத்தனை six அடிக்கிறேன்னு
சுள்ளான் : பாக்குறேன் பாக்குறேன்
(முதல் பந்திலேயே விக்கெட் பதம் பார்க்கப்பட , ரமேஷ் சோகமாக back to the pavilion)
சுள்ளான் : என்னணே, சவடால் விட்ட. இப்படி போன மச்சான் வெறும் கையோட திரும்பி வந்தான்ற கதையா ஆகி போச்சே!
ரமேஷ் : எலேய் ..க்காளி! நான் திண்ணய பிடிச்சு நடக்கும் போது நீ என்னைய பிடிச்சு நடந்தவேன் , இன்னைக்கு எனக்கே எடக்கா? போடா போய் பப்பர முட்டாயி வாங்கி சப்பிக்கிட்டே வீடு போய் சேரு.
சுள்ளான் : இதுக்கெல்லாம் ஒண்ணும் கொறச்சல் இல்ல!
( சிரிப்பொலி அடங்க வெகு நேரம் ஆகியது )

2. இன்னொரு நாள் மைதானத்தில், எங்க ஊர்ல கறிக்கடை வைத்திருக்கும் முத்து அண்ணன் கிரிக்கெட் பார்க்க வந்திருந்தார். அவருக்கு கிட்டி மட்டும் தான் தெரியும், கிரிக்கெட் எல்லாம் புதுசு.

முத்து : ரிபேக்கு ( விவேக்’க தான் அப்படி சொல்லுவார்), வாத்தியார் கணேசன் எதுக்குப்பா நடுவுல நின்னுக்கிட்டு கைய கால தூக்கிட்டு இருக்கியான் (இருக்கான்) ?
நான் : அவன் umpire ணே
முத்து : அப்படினா ?
நான் : ( எப்படி இவருக்கு புரிய வைக்கிறது என்ற யோசனையுடன்) , அவுட்னா அவுட்னு சொல்றவரு, நாலு ரன் அடிச்சா நாலு காட்டுவாரு.
முத்து : நல்லது கெட்டது சொல்றவனா? வாத்தியாருக்கு பொருத்தமான வேலதேன்பா.
( அடக்க முடியாமல் உருண்டு சிரித்தோம் )

3. Forest Department’ல இருந்து மரம் வளர்க்கும் திட்டத்துக்காக , ஊர சுத்தி இருக்க மலை மேல ஹெலிகாப்டர்ல வந்து விதை தூவுனாங்க. அப்ப எங்க ஊர கடந்து தான் ஹெலிகாப்டர் போகும். எங்க ஊர் பக்கம் ஹெலிகாப்டர் பறக்குறது எல்லாம் ரொம்ப அதிசயம். நாங்க விளையாடிட்டு இருக்கும் போது , இரு சிறுவர்கள்(மறுபடியும் சுள்ளானுங்க தான்), ஒருத்தன் பேரு தண்ணிப்பழம் , இன்னொருத்தன் பேரு குழைவெட்டி ( பட்ட பேரு தான், எங்க ஊருக்காரனுங்களுக்கு எங்க இருந்து தான் பேரு எல்லாம் கிடைக்குமோ? )

தண்ணிப்பழம் : எலேய் மாப்ள, அங்க பாருடா வானத்துல ராக்கெட்டு
குழைவெட்டி : ( ஆச்சரியமாக) ஆமுடோய், ஆத்தாடி.. மேல பெரிய காத்தாடி எல்லாம் இருக்கு !!
( இருவரும் சிறிது நேரம் அதை விரட்டி கொண்டே ஓடினார்கள், பின்பு அருகில் கிடந்த கல்லை எடுத்து ஹெலிகாப்டர் நோக்கி எறிந்தார்கள்)
தண்ணிப்பழம் : எண்ணே கீழ எறங்குங்க!
குழைவெட்டி : எண்ணே, வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்டுட்டு போங்க.
( ஹெலிகாப்டர் போய் கொண்டே இருக்கிறது )
தண்ணிப்பழம் : ( கடுப்புடன் ) அடியே சொல்லிக்கே(சொல்லிக்கொண்டே) இருக்கேன் , உன்வாக்குல(உன் இஷ்டம்) என்ன பறந்துக்கே (பறந்துக்கொண்டே) இருக்க, இப்ப எறங்குறியா இல்லையா?
குழைவெட்டி : ஆம்பளைனா எறங்கிவாட ஒத்தைக்கு ஒத்தை பாக்கலாம்!
( சிறிது நேரம் விரட்டிக் கொண்டே ஓடி களைத்து போய் திரும்பினார்கள் )

சென்னையில் தங்கி வேலை பார்த்த போது, என் roommate உதயன், சரவணன் ரெண்டு பேரும் சகலை ரகளை மாதிரி, Timing காமெடி எல்லாம் பிரிச்சு அள்ளிடுவானுங்க. இவனுங்க பேசுறத கேக்குறதுக்கு பக்கத்து ரூம்ல இருந்து ஒரு ரசிகர் படையே வந்து போகும், அதுல தமிழ் தெரியாத ஹிந்தி நண்பரும் அடக்கம். இவனுங்க காமெடி’ ல சின்னதா ரெண்டு sample.

4. உதயன் ஊர்ல இருந்து சென்னைக்கு திரும்பி வர்றான், கதவு தட்டும் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டு இருந்த நான் எழுந்து கதவை திறக்கிறேன்.

உதயன் : ( சோகமாக) பஸ்ல பர்ஸ எவனோ அடிச்சுடாண்டா! கிண்டில இருந்து நடந்து வர்றேன்.
நான் : (கவலையுடன் ) எங்கடா அடிச்சானுங்க?
உதயன் : தெரியல, விழுப்புரத்துல தான் பாத்தேன். நல்லவேளை மெட்ராஸ் வரைக்கும் டிக்கெட் எடுத்திருந்தேன்.
( உள் ரூமில் உறங்கி கொண்டிருந்த மணி )
மணி : அண்ணே , எப்பணே ஊர்ல இருந்து வந்திங்க? தம்பிக்கு என்ன வாங்கிட்டு வந்திங்க?
உதயன் : நெறைய கடன் வாங்கிட்டு வந்துருக்கேன்டா, அடச்சிருவியா?
மணி : காலைலேயே ஆரம்பிச்சுடிங்களா?
( அந்த கவலையிலும் சிரிப்பு வந்தது )

5. சரவணன் பேசுற இங்கிலீஷ் காமெடியா இருக்கும் , உதாரணத்துக்கு ஒரு தடவ ஆடு நடந்து போனத – ‘மட்டன் இஸ் வாக்கிங்’ அப்படின்னு சொல்லி, எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி குடுத்தான். ஒரு தடவ பக்கத்து ரூம் பசங்க , நாங்க எல்லாரும் டீ குடிக்க வெளிய போனோம். அங்க ஒரு நாயர் கடை இருக்கும், அவரு variety’a பஜ்ஜி , கெட்டி சட்னி எல்லாம் வச்சித் தருவார்.

சாப்டுட்டு காசு குடுத்தோம். சரவணன் உஷார் பார்ட்டி, பில் குடுக்குற நேரத்துல ஆள் இருக்க மாட்டான். அப்ப பக்கத்து ரூம் பையன்

என்ன சரவணன் tips எதாவது குடுக்கலாம்ல ? பாவம் அவரு இத்தன பேருக்கு பஜ்ஜி, டீ எல்லாம் குடுத்தார்.
சரவணன் : Tips’a ..குடுக்குறேன்.. பஜ்ஜி’ல காரம் கொஞ்சம் போடணும் , சட்னில உப்பு கொஞ்சம் குறைக்கணும் ..இது போதுமா இல்ல இன்னும் வேணுமா ?

( ரூம் வரும் வரை சிரித்துக் கொண்டே வந்தோம் )

அப்ப அப்ப இந்த மாதிரி காமெடி கடிகளை தொடரலாம்னு இருக்கேன்!! என்ன சொல்றிங்க ?

 

 

Comments (4)

« Newer Posts · Older Posts »