ஒக்கேனக்கல்- கிடப்பில் போடப்போகும் திட்டம்

தண்ணீருக்கான அடுத்த அரசியல் போராட்டம்  ஆரம்பமாகிவிட்டது.  இந்த முறை நடக்கும் போராட்டம்  முற்றிலுமாக கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக அங்குள்ள அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகம் என்பது அரசியல் அறிவேயில்லாத ஒரு பாமரனுக்குக்கூட தெரியும்.  ஒரு வார முதல்வராக இருந்த  ‘ருசி கண்ட பூனை’ (எடியூரப்பா) ,  அடுத்த நாற்காலி மோகத்தில் தொடங்கி வைத்த கலவரப்போர்.  இதனால் பாதிக்கப்படுவது, இருபக்கத்தையும் சார்ந்த ஒன்றும் அறியாத அப்பாவி பொது ஜனங்கள்.

வறட்சியின் கோரப்பிடியில் இருக்கும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகத்தை தணிக்கும் முயற்சியில் உருவானது தான் இந்த ‘ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்’ .  114 கோடி ரூபாய் முதலீட்டில், ஜப்பான் வங்கி ஒன்றின் உதவியுடன்  கூடிய  ஒரு மெகா திட்டம்.  இத்திட்டத்தால் பயன் பெறப்போவது தமிழகத்தின் இரு மாவட்டங்களை சேர்ந்த  மக்கள்.  தனக்குப் போக மிஞ்சியது தான் தமிழகத்துக்கு என்று இறுமாப்புக் கொண்டிருந்தவர்கள், இன்று நமது பகுதியிலுள்ள தண்ணீரை, தாகத்துடன் தவித்துக் கொண்டும், சுகாதாரமற்ற  ( fluoridated water ) தண்ணீரை பல தலைமுறைகளாக பருகிக்கொண்டிருக்கும் தமிழனின், தாகத்தை தணிக்கும் திட்டத்திற்கு,  ஒரு குண்டர் படையுடன் கறுப்பு கொடியை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள் ( அதிலும் வலிமையை காட்ட 50 பெண்கள் வேறு ) .  இவர்கள் நாற்காலியில் அமர்ந்து அழகுப் பார்த்துக்கொள்ள 30 லட்சம் மக்கள் தாகத்துடன் தவிக்கவேண்டும், இது தான் நமது அரசியல்வாதிகளின் லட்சணம்.

இதற்காக இவர்கள் சொல்லும் காரணங்கள்,

1. இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதை அண்டை மாநிலங்களுக்கு அறிவிக்கவில்லை.  ( இது நேத்து முடிவு பண்ணி இன்னைக்கு செயல்படுத்துற திட்டம் இல்லைங்கனா.. பத்து பதினஞ்சு வருஷம் பொறுமையா எங்க அரசியல்வாதிங்க யோசிச்சு, போனா போகுதுன்னு ஒரு பூமி பூஜைய போட்டாங்க, அது ஒங்களுக்கு பொறுக்கல)

2. இத்திட்டம் செயல்படுத்தப் போகும் இடம் கர்நாடகத்துக்கு சொந்தமான இடம்.   ( ஜப்பான் நாட்டு வங்கி மில்லியன் டாலர்ல கடன் குடுக்குறானே, background verification எல்லாம்  பண்ணாமலா ஒத்துக்கிட்டான் ?  )

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவாவது தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒருங்கினைந்தனவே!   நடிகர்களின் உண்ணாவிரதம், அதிலும் ரஜினியின் பங்கேற்பு  மற்றும் ஆவேச பேச்சு, சத்யராஜின் தாக்குதல் பேச்சு, கமலஹாசனின் சமயோஜித பேச்சு அத்தனையும் ஓரளவுக்கு தமிழர்களின் ஒற்றுமையையும் வலிமையையும் காட்டுபவையாக இருந்தது. ஆனால் இது என்னவோ அடுத்த கிடப்பில் போடப்போகும் திட்டம் போல் தான் தெரிகிறது. காவேரி உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கமிஷன் அறிக்கைக்கே செவி சாய்காதவர்கள் இதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவா போகிறார்கள்?

கலைஞர், தற்சமயத்துக்கு இவ்விவகாரத்தை ஆறப் போடுவதாக கூறியிருந்தாலும், தேர்தலுக்கு பின்னும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது மிக கடினமே! ஒவ்வொரு கட்சியும் வரிந்துக் கட்டிக்கொண்டு இத்தேர்தலை சந்திக்கின்றன. காங்கிரஸ், மராட்டிய கவர்னராக இருந்த S.M.கிருஷ்ணாவை  ராஜினாமா செய்ய வைத்து, முன்னிறுத்தி இருக்கிறது. தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஆட்சியை பிடித்த பா.ஜ.க. , தனது ஒரு வார ஆட்சியை நிரந்தரமாக்கப் பாடுபடும், வார்த்தை தவறிய ஜனதாதளத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பார்கள் அது தனக்கு அனுதாப ஓட்டுக்களாக விழும் என்ற நம்பிக்கை தான் எடியுரப்பாவை போராட வைத்தது. தானும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து பார்த்துவிட்டேன் என்று பெருமைப் பட்டுகொள்ளும் தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் தங்கள் கட்சி ஆட்சியை பிடிப்பதற்கு, ஆள் பிடிக்க ஆரம்பித்திருப்பார்கள். சுள்ளான்களான வாட்டாள் நாகராஜாக்களும் சுறுசுறுப்பாகி இருப்பார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கினைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பது இயலாத காரியம்.

 மத்திய அரசு, துணிச்சலான ஒரு நடவடிக்கை எடுக்காத வரையில் இந்தத்திட்டம் செயல் வடிவம் பெறுவது மிக மிக கடினமே! இது போன்ற அரசியல்வாதிகள் இருக்கும்வரை வடநாட்டவர் மராட்டியத்தில் இருந்தும், ஹிந்தி பேசுபவர்கள் அசாமில் இருந்தும் , தமிழர்கள் கர்நாடகத்தில் இருந்தும் விரட்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பார்கள். 

~ ஆல் Vivek மேல் ஏப்ரல் 6, 2008.

3 பதில்கள் to “ஒக்கேனக்கல்- கிடப்பில் போடப்போகும் திட்டம்”

  1. aamaya , thani thamil naadu nu poradalamnu thonuthu , enna soldrainga

  2. Karunanidhi has taken a diplomatic decision by temporarily halting the project. But Jaya want to exploit this scenario to her advantage. Political game :)

    Also read:[Oru vilambaram]
    http://aliensofnec.wordpress.com/2008/04/07/muttal-vatal-%e2%80%93-by-rjp/

  3. தனித் தமிழ்நாடு வாங்கிட்டா, காவேரி தமிழ்நாட்டுக்கு வந்துருமா? ஆ..ஊ னா இந்த கோஷத்த எழுப்பாதிங்க! அப்பறம் அங்க ஒருத்தர் , தெக்க மதுரைய பிரிச்சு கேப்பாரு..வடக்க ஒரு ஐயா கேப்பாரு. map தார் தாரா கிழிஞ்சிடும்.

மறுமொழி இடுக